சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக முடிக்கப்பட்டு தற்போது பயணப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ரூபாய் 61,843 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதவரத்தில் துவக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திட்டத்தில் மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் ரயில்வே திட்டப் பணிகள் ராட்சத இயந்திரம் மூலம் 700 மீட்டர் வரை ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா