சென்னையில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது தெரியுமா?

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மாநகரம்…

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் மாநகரம் முழுவதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள்  சென்னையில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4,500 படுக்கை வசதிகளுடனும், அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,500 படுக்கை வசதிகளும், சென்னை பல்கலைக் கழகத்தில் 900 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல சென்னை ஐஐடியில் 820 படுக்கை வசதிகளும், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, ஜவஹர் பொறியியல் கல்லூரி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களில் கூடுதல் 12 படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.