முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!

சென்னை வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-ம் எண் வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதது குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் மட்டும், நாளை மறுநாள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த வாக்குச்சாவடி ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டது என்பதால், 548 ஆண் வாக்காளர்கள் நாளை மறுநாள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை பரப்புரை மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஹெல்மெட் அணியாமல் பேருந்து ஓட்டியதாக அபராதம்… அதிர்ந்த உரிமையாளர்!

Saravana

ரூ. 700 கோடி மதிப்பிலான அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!

Gayathri Venkatesan

2500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana