சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல, வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தாவது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு’
மேலும், மொத்தமாகச் சென்னை மாநகராட்சியில் உள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான விவரங்களை மாநகராட்சியின் இணைய இணைப்பின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இது தொடர்பான புகாருக்கு 1913 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக வாகன நிறுத்த இடங்களில் முறையான விதிகள் பின்பற்றப்படாமல் இருப்பது தொடர்பாகப் புகார் எழுந்த நிலையில் காவல்துறையுடன் இது சம்பந்தமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி சென்னை மாநகராட்சி இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








