தமிழ் சினிமாவில் காமெடி, ஆக்ஷன், காதல் என சகலத்தையும் கலந்தடித்து வெற்றிகண்ட இயக்குநர் வெங்கட்பிரபு. சிம்புவுடன் அவர் கைகோர்த்து உருவாகிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இருப்பினும் இதைத்தொடர்ந்து வெளியான வெங்கட் பிரபுவின் adult காமெடி படமான மன்மதலீலை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சொதப்பியது.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை நாக சைத்தான்யாவை வைத்து இயக்குகிறார் வெங்கட்பிரபு. தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படாத நிலையில் நாக சைதன்யா 22 என அழைக்கப்படுகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர்களாக இசைஞானி இளையராஜாவும், இசை அரக்கன் யுவன் சங்கர் ராஜாவும் கை கோர்க்க உள்ளார்கள் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
A dream come true moment for me!! Joining hands with my uncle (periyappa) #isaignani @ilaiyaraaja for the first time along with my brother @thisisysr for #NC22 #VP11 pic.twitter.com/OVzZS03T8B
— venkat prabhu (@vp_offl) June 23, 2022
வெங்கட் பிரபுவின் பல படங்களில் இளையராஜாவுடைய இசையின் reference-கள் இருந்தாலும் இருவரும் கைகோர்ப்பது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் வெங்கட் பிரபுவுக்கு தன்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெலுங்கில் கூறியவாறு வீடியோ பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இசைஞானி. தன் வாழ்வில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய விருதாக இதை நினைக்கேறேன் என மனம் உருகி இந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார் வெங்கட் பிரபு.
All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022
ஏற்கனவே யுவனும்- இளையராஜாவும் சீனுராமசாமி இயக்கி விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட் பிரபு காம்போவில் இருவரின் இசையும் ரகளையாக இருக்கப்போகிறது எனவும், வரக்கூடிய காலங்களிலும் இந்த யுவன் – ராஜா காம்போ தொடரலாம எனவும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.