முக்கியச் செய்திகள் சினிமா

பூஜையுடன் தொடங்கியது NC22 படப்பிடிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யாவின் NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில், வித்தியாசமான பரிமாணத்தில் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும் ரசிகர்களைக் கவரத் தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைத் தந்த, அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் உருவாகும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது, இதனையொட்டி தயாரிப்பாளர்கள் நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்த, பெரும் உற்சாகமான இரண்டு அறிவிப்புகளைத் தந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அழகு இளம் தேவதை, நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிப்பின் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால், தென்னிந்தியத் திரைத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோரை வரவேற்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் உற்சாகத்தில் உள்ளது. வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா கூட்டணியில் ஒரு திரைப்படம் முன்னதாகவே நடக்க இருந்தது. ஆனால், இருவரும் அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற ஒரு சரியான திரைப்படத்திற்காகக் காத்திருந்தனர், தற்போது இந்த கூட்டணி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் பிரமாண்டமாக இணைந்துள்ளது. இப்படம் வெங்கட் பிரபுவின் டிரேட்மார்க் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த அட்டகாசமான கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். தவிர, நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள அனைவரையும் கவரும் ஒரு அழகான பாத்திரத்தில் தோன்றவுள்ளார். இந்த திரைப்படத்தில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தைப் பற்றி வரவிருக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகள் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கும்.

அண்மைச் செய்தி: ‘பாலியல் வன்கொடுமை; வளர்ப்புத் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை’

Srinivasaa Silver Screens தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சிட் தூரி, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்படி, இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். தற்போது, அவர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தைத் தயாரித்து வருகிறார், பவன் குமார் வழங்கும் இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார், இப்படம் ஜூலை 14, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ராம் பொதினேனி மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (அகண்டா புகழ்) கூட்டணியில் மற்றுமொரு அட்டகாசமான திரைப்படத்தை இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் இயக்குநராக வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகும், கோலிவுட்டில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம். தெலுங்கு திரையுலகின் யூத் ஐகான் நாக சைதன்யா இந்த திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யாவின் NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முடிந்தால் கைது செய்யுங்கள்: அண்ணாமலை

Ezhilarasan

திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

Ezhilarasan

கொரோனாவுக்கு எதிராக மாத்திரை; பைசர் அறிவிப்பு

Halley Karthik