ஐபிஎல் தொடக்கப்போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன! முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள துவக்கப் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள துவக்கப் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 17வது சீசனும், 18வது மக்களவைத் தேர்தலும் (ஏப்., – மே மாதங்களில்) ஒரே சமயத்தில் நடக்க உள்ளன. இதனால் ஐ.பி.எல்., தொடர் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. 2009ல் மக்களவைத் தேர்தல் காரணமாக தென் ஆப்ரிக்காவில் நடந்தது. 2014ல் தேர்தல் நடந்ததால், பாதி போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு மாற்றப்பட்டன. கொரோனா காலத்தில்(2020, 2021) போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன. 2019ல் மக்களவை தேர்தலுடன் ஐ.பி.எல்., தொடரும் இந்தியாவில் நடந்தது.

இதே போல இம்முறையும் உள்நாட்டிலேயே போட்டிகள் நடக்க உள்ளன. இதில் சென்னை, குஜராத், மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் 21 போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, துவக்க போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/IPL/status/1760646320245580062

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.