தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது!

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலைப்பட்டியலில் உள்ள விலைகளின்படி நாளை அக்.28 முதல் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் குறிப்பிட்டு, விற்பனை விலைகளை திருத்தி ஆவின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி நாளை அக்.28 முதல், தயிர், நெய், இனிப்புகள், மோர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தயிர்: 50கிராம் க்கு ரூ.2ம் , 200 கிராம் க்கு ரூ.3ம், 200 கிராம் (SPL) க்கு ரூ.5ம், 500 மிலி க்கு ரூ. 5ம், ப்ரீமியம் தயிர் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கான விலை ₹10 உயர்த்தப்பட்டுள்ளது.

நெய்: ஒரு லிட்டர் பாக்கெட்டின் விலை ₹80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இனிப்புகள்: 250 கிராம் பாக்கெட்டுகளின் விலை ₹15 முதல் ₹20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மோர்: 200 மி.லி பாக்கெட்டின் விலை ₹2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மில்க் ஷேக்குகள்: 200 மி.லி அளவில் கிடைக்கும் 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலையும் ₹30-லிருந்து ₹35-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்ட நிலையில், தட்டுப்பாடு நிலவவில்லை என ஆவின் நிர்வாகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில் ஆவின் பால் பொருட்களின் இந்த திடீர் விலையுயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.