“என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?” – கனிமொழி

இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை, சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை என கனிமொழி விமர்சித்துள்ளார்.

தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறையில் வலிப்பு வந்ததாக நடித்து காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன.

இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை!

இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.