சென்னையில் வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இங்குள்ள ஒரு சில கடைகள் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையத்து, நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வாடகை பணம் செலுத்தாததால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி குறிப்பிட்டிருந்தது. இருந்தபோதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை. இதையடுத்து, நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த 130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனர்.
வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர். மாநகராட்சி அதிகாரிகள் திடீரென வந்து கடைகளை பூட்டி சீல் வைத்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
– இரா.நம்பிராஜன்