செங்கல்பட்டு: 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வியாழக்கிழமை (நவ. 16) ஒடிஸா கடற்கரைக்கு நகரும்.

இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும்.  தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:  சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்!

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 63 ஏரிகள் உள்ளன.  இதில் சிறுதாவூர், கொண்டங்கி, தையூர், மானாமதி, காயார் உள்ளிட்ட பகுதிகளின் பெரிய  ஏரிகள் உள்ளன.

தற்போது பெய்துவரும் மழை காரணமாக,  தையூர் பெரிய ஏரி, மானாமதி, சிறுதாவூர் உள்ளிட்ட 10 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பின.  நிரம்பிய ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.