கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என்பதால் கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். மேலும் கிராம மக்களிடம் புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் குடிநீர் பைப் லைன் அமைப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது எனவும், இதனால் தங்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைப்பதில் சிரமமும் ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
எனவே கிராம மக்கள் உடனடியாக விரைந்து குடிநீர் பைப் லைனை அமைத்து குடிதண்ணீரை தடை இல்லாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் சேத்தியாத்தோப்பு சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
—அனகா காளமேகன்







