விஜய்- ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம்…?

தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை இன்று மாலை சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க பெரும்பான்மையை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த காங்கிரஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் ஆகியவை தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளும், சிபிஐ 2 தொகுதிகளும் வென்றிருந்தான. இதனை தொடர்ந்து தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் இன்று மாலை 4: 30 மணியளவில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் விஜய் – ஆளுநர் சந்திப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி விஜய் ஆளுநரை மாலை 6 மனிக்கு சந்திப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. விசிக, மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தவெக விற்கு ஆதரவு அளிக்க உள்ளதகவும் அதனால் தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.