அரியணையை நெருங்கும் விஜய்… தவெகவிற்கு சிபிஎம் ஆதரவு…!

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க சிபிஎம் கட்சி அதரவு அளித்துள்ளது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.

இதில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸும் 2 எம்.எல்.ஏக்களை கொண்ட சிபிஐ கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுன் தவெகவிற்குஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்) கட்சி ஆதரவு அளித்துள்ளதால் தவெகவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.