தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு …!

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி. அர்க்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். ஆனால் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்று கூறி ஆளுநர் மறுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.

இதில் 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மற்றொரு திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிபிஐ கட்சி ஆதரவு அளித்துள்ளதால் தவெகவின் பலம் 115 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.