சந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!

புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், காரைக்காலில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்றதாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை…

புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், காரைக்காலில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்றதாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த 10-ம் தேதி ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவரை அதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே முதலமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

அப்படி முதலமைச்சரால் சந்திர பிரியங்கா பதவி நீக்கப்பட்டால் இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்த கடிதத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை . 

இந்நிலையில் இன்று மாநிலம் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சி பஞ்சாட்சரபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் என போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் சந்திரப்பிரியங்கா அமைச்சர் பதவியில் நீடிக்கின்றார் எனவும், அவரது பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.