நாட்டின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு (88) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மதியம் உயிரிழந்தார்.
சந்திரா நாயுடு முன்னாள் கிரிக்கெட் வீரர் சி.கே.நாயுது மகள் ஆவார். இந்தூர் அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர். 1950 -களில் ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்தார். மேலும் அவருக்கு கிரிகெட் மீது கொண்ட ஆர்வத்தால், சர்வதேச போட்டியின் முதல் பெண் வர்ணனையாளராக பணியாற்றி முதல் பெண் என்ற சாதனைப்படைத்தார்.
சர்வதேச போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரா நாயுடு மத்திய பிரதேச கிரிக்கெட் குழு உறுப்பினராக இருந்து சிலகாலம் பணியாற்றிவந்தார்.
சந்திரா நாயுடுவின் சகோதரி மகன் விஜய் நாயுடு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சந்திரா நாயுடு வயது மூப்பு காரணமாக தனது 88 வயதில் காலமானார் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்