தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் கிழக்கு…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்:  பாங்காக்கில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய் | ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

மேலும் நவம்பர் 14-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.   இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் ஆகிய 4  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.