முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில்
நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து நேற்று (02.02.2023) நள்ளிரவு
முதல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவுகிறது .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தைப் பொறுத்த வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. லேசான மழை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே
50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  எனவே அந்தப் பகுதி  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 5:30 மணி வரை  அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 88 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கால்பந்தின் அரசன் பீலே; யாராலும் எதிர்கொள்ள முடியா ஒற்றை சூறாவளியின் கதை

EZHILARASAN D

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா

Gayathri Venkatesan

அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

G SaravanaKumar