பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராட முடியாதவர்கள் கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.
முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் ‘பேனா’ நினைவுச் சின்னம் கடலுக்குள் பலமைல் தூரத்தில் நினைவுச்சின்னம் கட்டப்படவில்லை. 360 மீட்டருக்குள்தான் அமைக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அறிவுக்கொழுந்துகள் சொல்வது படி பார்த்தால், துறைமுகங்களே இருக்க முடியாது. இருக்கும் துறைமுகங்கள் அனைத்தையும் உடைக்கத்தான் வேண்டும். கடற்கரையில் மீனவர் கிராமங்களே இருக்க முடியாது. மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று இவர்களே நாளைக்குச் சொன்னாலும் சொல்வார்கள்.
இராமேசுவரம் மீனவர்களின் சாதாரண வலைகளில் கடலின் அரிய வகை கடல்பசு, சித்தாமை சிக்குவதாக தகவல் வெளியானது. அப்படியானால் மீனவர்கள் இனி வலைகளையே பயன்படுத்தக் கூடாது என்பார்களா? இதற்கெல்லாம் ‘மங்குனி’ ஆமைகளிடம் பதில் இருக்காது.
புதிய தேசிய மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை உருவாக்கிய பா.ஜ.க. அரசின் மீனவர்களை நசுக்கும் சட்டத்துக்கு எதிராகப் போராடத் துப்பு இல்லாத இவர்கள் – கலைஞரின் பேனாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள். இவர்களை விட சுற்றுச்சூழலைக் காக்கும் அக்கறை கலைஞரின் அரசுக்கு உண்டு.
உலகளாவிய குழுவை அமைத்திருக்கும் ஒரே மாநில அரசு தமிழ்நாடு அரசே. எனவே, கலைஞரின் பேனா காக்கும்! சிலதுகள் கனைக்க வேண்டாம்’ என முரசொலியில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.