முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நம்ம சத்தம்” – ரசிகர்கள் உற்சாகம்

பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ”நம்ம சத்தம்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்துதல. 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் இப்படம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் பாதி கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்த்தனை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இடம்பெறும் இரண்டாம் பாதி முழுவதும் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்குகிறார்.

பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்த இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இப்படித்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பத்து தல படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

மேலும் நம்ம சத்தம் என தொடங்கும் இப்படலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ளார். பாடல் ஆசிரியர் விவேக் வரிகளில் சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் இப்பாடல் உருவாகியுள்ளது. பல நாட்களாக இந்த படத்தின் அப்பேட்டுக்காகக் காத்திருந்த சிம்பு ரசிகர்கள், படத்தின் முதல் சிங்கிள்  வெளியானதன் மூலம் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வெந்து தணிந்தது காடு’ குறித்து ரசிகர்களிடம் மனம் திறந்த சிம்பு!

EZHILARASAN D

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

EZHILARASAN D

பசுமை நாயகன் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Arivazhagan Chinnasamy