நீலகிரியில் ஜன. 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நீலகிரியில் ஜன.4,5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜன.1) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து…

நீலகிரியில் ஜன.4,5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜன.1) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜன.2) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிவுகிறது.   இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இந்த நிலையில் இன்று (ஜன.2) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள்:  “விலங்குகள், பறவைகளை கணக்கெடுக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

இதனைத் தொடர்ந்து, ஜன.4,5 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இதனைத் தொடர்ந்து நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இதன் காரணமாக இன்று (ஜன.02) குமரிக்குடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.