தமிழகத்துக்கு வழங்கக் கூடிய ஆக்சிஜன் ஒதுக்கீடு, 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலமைச் சர்களுடன் பிரதமர் மோடி பேசி நிலைமையை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் பிரதமர் மோடி பேசினார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார். தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தி ருந்தார். இந்நிலையில், ஏற்கனவே இருந்து வந்த ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவை 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.







