கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 971 நபர்களுக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து…

கேரளாவில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 971 நபர்களுக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 971 நபர்களுக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 27 ஆயிரத்து 456 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 43 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.