மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.…

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதே சமயம் இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிறு முழு ஊரடங்கின்போது ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.