சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து  ஓணம்  கொண்டாட்டம்

சென்னையில் கேரள பெண்கள்  பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். வருகின்ற  எட்டாம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் வாழும் கேரளா மக்கள் ஒன்றிணைந்து வடசென்னை ஐயப்பன் கோவிலில்…

சென்னையில் கேரள பெண்கள்  பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வருகின்ற  எட்டாம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் வாழும் கேரளா மக்கள் ஒன்றிணைந்து வடசென்னை ஐயப்பன் கோவிலில் திருவோண பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. வட சென்னையில் வாழும் கேரள மக்கள் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.  கேரளாவில் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையை அனைத்து பெண்களும் தங்களது வீடுகளில் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் அத்திப்பூ கோலமிட்டு கொட்டிகளி திருவாதரா நடனம் ஆடுவது வழக்கம். அதேபோன்று வடசென்னை ஐயப்பன் கோவிலில் தங்கள் குடும்பத்தாருடன் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து மகாபலி அசுர சக்கரவர்த்தி வேடம் அணிந்தவர் முன்னிலையில் மல்லிப்பூ சம்பங்கிபூ சாமந்திப்பூ, உள்ளிட்ட பலவகையான பூக்களால் அழகான அத்திப்பூ கோலமிட்டு அந்த கோலத்தை சுற்றி பாரம்பரிய நடனம் கொட்டிகளி திருவாதரா நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தீமைகள் விலகி நாடு வளம் பெறவும் அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவம் என்ற முறையில்  சாதி ,மதம் ,மொழி வேறுபாடுகளை கலைந்து மகிழ்ச்சியாக வாழவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக  பெண்கள் தெரிவித்தனர் . இந்த நிகழ்ச்சியில் ஓணம் சந்தை நடைபெற்றது கேரளாவில் விற்பனையாகும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மருத்துவப் பொருட்கள் கேரளா பாரம்பரிய உடைகள் அலங்கார பொருட்கள் அப்பளம் ,சிப்ஸ் ,தேங்காய்  போன்ற  இயற்கை சோப்பு மூலிகை பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.