புதுச்சேரி அரசின் விருதினைப் பெறும் கூழாங்கல் திரைப்படம்

சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி அரசின் விருதினை பெறும், அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்-ன் கூழாங்கல் திரைப்படம். புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் திரைப்படவிழா நடைபெறும்.இதில் இந்திய…

சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி அரசின் விருதினை பெறும், அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்-ன் கூழாங்கல் திரைப்படம்.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் திரைப்படவிழா நடைபெறும்.இதில் இந்திய பிராந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படும். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத இவ்விழா இந்த ஆண்டு வரும் 9ஆம் தேதி துவங்குகிறது. அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார். சங்கரதாஸ் சாமிகள் பெயரில் சிறந்த திரைப்படத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படமாக கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எளிமையான மக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. கூழாங்கல் திரைப்படம் கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட படம். அறிமுக இயக்குனரான பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில்,இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர்களாக ஜெயா. பார்த்திபன், விக்னேஷ் குமுளையும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவாவும் பணியாற்றியுள்ளனர்.‘கூழாங்கல்’ திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது போது புதுச்சேரி அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதினை 9ஆம் தேதி மாலை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.