நடிகர் சூர்யா சினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பயணம் அழகானது என தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, சினிமா துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் முதன் முதலில் நடித்த நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த படத்தில் விஜய், சிம்ரன், கவுசல்யா, ரகுவரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார். அறிமுகமான முதல் படமே சூர்யாவுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: விமர்சனங்களைத் தாங்கி நடிப்பில் சரவணன் செதுக்கிய சிற்பம் சூர்யா
இதையடுத்து, சூர்யா நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களை கவர்ந்து இழுக்க தொடங்கியது. ஒரு சில படங்கள் வசூல் செய்வதில் பின்தங்கி இருந்தாலும் சூர்யா நடிப்பிற்காக வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒவருவாக சூர்யா கொடிக்கட்டி பறக்கிறார்.
இந்நிலையில், சூர்யாவின் 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், Suriya, 25 years of Suriya உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது. பாலாவுடன் வணங்கான், சிவா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் மற்றும் வெற்றி மாறனுடன் வாடிவாசல், விக்ரமின் அடுத்த பாகம் உள்ளிட்ட சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த 25 ஆண்டுகள் பயணம் மிக அழகானது என்றும் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
Truly a beautiful and blessed 25years..! Dream and believe..!
Your suriya.— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
அவரது 25 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை பயணத்திற்கு ரசிகர்கள், நடிகர்கள், சினிமா துறையினர் சூர்யாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்
Twitter Id: https://twitter.com/Nambijournalist