கரூர் வழக்கு : சிபிஐ விசாரணையில் ஆஜராக டெல்லிக்கு புறப்பட்டார் விஜய்….!

தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையில் 2-வது முறையாக ஆஜராவதற்காக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்ன்ணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறது. இக்கட்ட்சி 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனையொட்டி விஜய் தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தேசிய அளவில் அதிவலைகளை ஏற்படுத்து இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகளின் விசாரணையானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தி விஜய்க்கு சம்மன் அனுப்பட்டது. இதனையடுத்து தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது.

சிபிஐ அதிகாரிகளின் முதல்​கட்ட விசா​ரணை முடிந்த நிலை​யில் அவர் சென்னை திரும்​பி​னார். அவர் அடுத்​தகட்ட விசா​ரணைக்​காக பொங்​கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்​டும் ஆஜராகுமாறு ​சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்காக 2-வது முறையாக  இன்று மாலை தனி விமானத்தில் டெல்லி செல்லார். இதனையொட்டி தற்போது தவெக தலைவர் விஜய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.