காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது; எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில்…

கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது; எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தலா 25,000 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிக்கு வரும் நீரின் அளவானது 21 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 25,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை நீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது.

இதனால் காவிரி ஆற்றில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணை மூலம் 1 லட்சம் கன அடி நீர் வெளியேற வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கனமழை, வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் நீலவாரா, பைந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான வீடுகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிராமப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.