அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வி.கே.சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா மேல்முறையீடு செய்தார். உரிய நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.செளந்தர், செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால், தன் தரப்பு வாதத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை வி.கே.சசிகலா தாக்கல் செய்துள்ளார்.