சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரை கடத்தி சென்று அவரது சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 6 அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயப்பாக்கத்தில் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துக்களை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் திருமங்கலம் காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 6 போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு பேர் என 10 பேருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை இவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.







