முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர்!

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர், அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் பதவியேற்ற 50 நாட்களுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். எனினும், அமைச்சரவையில் யாருக்கு எவ்வளவு இடம் என்பதில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது.

இதனால் அமைச்சர்கள் பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர்களாக என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர பிரியங்கா பெண் அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாதுரை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு உரிய முக்கியத்துத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குவார் என்று 40 வருடங்களுக்கு பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.

அவர் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த பெண்கள் சார்பில் நான் இங்கு இருக்கிறேன். இதற்கு முழு காரணம், எங்கள் கட்சியின் தலைவர் ரங்கசாமி. பெண்ணுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என எனக்கு அமைச்சர் பதவியை முதலமைச்சர் ரங்கசாமி தந்துள்ளார். பெண்கள் வளர்ச்சிக்கு, புதுச்சேரி வளர்ச்சிக்கும், இளைஞர்கள் வளர்ச்சிக்கும் என்னுடைய முயற்சிகளும் செயல்பாடுகளும் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் வைப்பேன்’ என்றார்.

Advertisement:

Related posts

பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!

Gayathri Venkatesan

“தமிழ்நாட்டின் உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்துவார்”

Gayathri Venkatesan

முதலமைச்சரின் புத்தக அரசியல்

Gayathri Venkatesan