மசினகுடியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நாட்களை கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனை யடுத்து, புலியை பிடிக்க முடியாவிட்டால், சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அதிரடிப் படையினருடன் நுழைந்த வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா வைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், மசினகுடி பகுதியில் சுற்றித்திரியும் புலியை சுட்டுக்கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளார். குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என தெரிவித்துள்ள அவர், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப் பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








