ஆண்டுக்கு ஒரு முறை கதர் ஆடைகளை பயன்படுத்தினால், பல கோடி தொழிலாளர் கள் பயன் பெறுவார்கள் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள் ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் காதி கதர் தொழில் மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், சிறுகுறு தொழில்களில் தான் மக்கள் அதிகம் பயன் பெறமுடியும் என்றார். எவ்வளவு சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் இல்லாமல், அரசு இயந்திரத்தை இயக்க முடியாது என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆணும், பெண்ணும் ஆண்டுக்கு ஒருமுறை கதர் ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம், பல கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எனவே, கதர் ஆடைகளை வாங்க உறுதி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.