அவங்க இல்லாததுதான் தோல்விக்கு காரணம்: தோனி

சிறப்பாக பந்துவீசக்கூடிய அனுபவ வீரர்கள் நேற்றைய போட்டியில் ஆடாததால், தோல்வியை சந்தித்தோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொன்னார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சென்னை சூப்பர்…

சிறப்பாக பந்துவீசக்கூடிய அனுபவ வீரர்கள் நேற்றைய போட்டியில் ஆடாததால், தோல்வியை சந்தித்தோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொன்னார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் கடைசிவரை நின்று சத மடித்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப் புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறும்போது, டாஸை இழந்தது மோசமானதாக அமைந்துவிட்டது. 190 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். பனியின் தாக்கம் இருந்ததால், பந்து சீரான வேகத்தில் பேட்டிற்கு வரத் தொடங்கியது. அதை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அதைத்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் செய்தனர். அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பவர்பிளே-யிலேயே போட்டியை அவர்கள் தங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டனர்.

ஸ்பின்னர்கள் பந்துவீசியபோது, பிட்ச் கொஞ்சம் கடினமாக இருந்தது. பிறகு ஒத்துழைத் தது. அதை ருதுராஜ் சரியாக பயன்படுத்தினார். இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் எதுவென்று, பந்துகளை எதிர்கொள்ளும்போதே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பேட்ஸ் மேன்கள் விளையாட வேண்டும். அவர்கள் பிட்சை சரியாகக் கணித்தனர். எங்கள் அணி யில் தீபக் சாஹர், பிராவோ இடம் பெறவில்லை. இருந்திருந்தால் நிலையை சரியாக கணித்து, சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். அவர்கள் இல்லாதது எங்களுக்கு இழப்புதான். இந்தப் போட்டியை மறந்துவிட வேண்டும். அதே நேரம் இதிலிருந்து பாடமும் கற்றுகொள்ள வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.