திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயிலில் வசந்த உற்சவம்!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில் சித்திரை மாத வசந்த உற்சவ விழா உற்சாகமாக தொடங்கியது. 108 வைணவத்திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள  திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும்.…

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில் சித்திரை மாத வசந்த உற்சவ விழா உற்சாகமாக தொடங்கியது.

108 வைணவத்திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள  திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும். இத்திருத்தலத்தில் மூலவர் நின்றநம்பி,கிடந்த நம்பி,மலைநம்பி,திருப்பாற்கடல் நம்பி, இருந்த நம்பி என 5 நிலைகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தாயாா் குறுங்குடிநாயகி ஆவார்.இங்கு அருள்பாலித்துவரும் நம்பியே நம்மாழ்வாராக அவதாித்ததாக தல வரலாறு கூறுகிறது.மேலும் இங்குதான் திருமங்கை ஆழ்வாா் முக்தி பெற்றாா். சுவாமி இராமானுஜருக்கு நம்பிபெருமாள் சிஷ்யனாக வந்து திருமண காப்பு இட்டு,உபதேசம் கேட்டதுமான திருவட்டப்பாறை அமைந்துள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புகள் தன்னகத்தே கொண்ட திவ்ய தேசத்தில் சித்திரை மாத வசந்த உற்சவம் திருக்குறுங்குடி இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிரகத்துடன் 10 தினங்கள் நடைபெறுகின்றது. அதன் ஒரு நிகழ்வாக உற்சவா் ஸ்ரீ சுந்தரபாிபூர்ண நம்பி தேவியருடன் கோயில் நந்தவனத்தில் மாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கென வசந்த மண்டபத்தில் வெட்டிவோ் பந்தல் அமைக்கப்பட்டு அதில் வாழை,பாக்கு போன்ற குளிா்ச்சியான மரங்களால் அலங்காிக்கப்பட்டு இருந்தது.

மேலும் சுவாமிக்கு சந்தனம், பூணுகு வாசனை திரவியங்கள் கலந்த குளிா்ச்சியான கலவை பூசியும், பூக்களால் பெருமாள் மற்றும் திரு உருவங்களை அலங்காித்தனா். தொடா்ந்து பல்வேறு வகையான பிரசாதங்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்டது. நறுமண துபம் காட்டி தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் அணிவிக்கப்பட்டு சடாாி மாியாதை வழங்கப்பட்டது. தாயாா்கள் சமேத பெருமாளுக்கு ஜீயா் சுவாமிகள் கவாி வீசினாா். திரளான பக்தர்கள் வந்திருந்து பெருமாளை தரிசித்து சென்றனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.