“நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்றது” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மே 5-ம்…

மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அந்த பிராமணப் பாத்திரத்தில், “மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று. அப்படி அந்த நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நியாயமானதாகவும் இருக்காது. நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த தேவையில்லை. ரகசியத் தன்மையை மீறும் வகையில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.