தடுப்பூசிக்கு எதிராக போராட்டம்; போலீசார் குவிப்பு

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தும் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்திலிருந்த கொரோனா பெருந்தொற்று…

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தும் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்திலிருந்த கொரோனா பெருந்தொற்று தற்போது தடுப்பூசியின் வருகைக்குப் பின் சற்றே குறையத் தொடங்கியுள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரையும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு உலக சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டாய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனரக வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்குப் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருவதால், ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தும் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய வர்த்தக வழித்தடமான அமெரிக்க – கனடா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நாட்டின் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.