முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் – கூகுள் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

உலகின் முன்னணி இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்குள் அனைத்து கூகுள் நிறுவன ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இல்லையெனில், 30 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும், அப்போதும் தடுப்பூசி செலுத்தவில்லை எனில், 6 மாதங்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமில்லாமல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த இரண்டு அவகாசத்திலும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கைவிடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, தற்போது பரவிவரும் ஒமிக்ரான் குறித்த அச்சம் காரணமாக ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

’வயசானா படிக்கக் கூடாதா என்ன?’ 104 வயதில் 89 மார்க் எடுத்த வாவ் பாட்டி!

Ezhilarasan

சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Ezhilarasan

கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் : விஜய் வசந்த்

Halley Karthik