உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்

நெல்லை உவரியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்கோடி கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புனித உவரி அந்தோனியார் திருத்தல பெருவிழா கடந்த 1ம்…

நெல்லை உவரியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்கோடி கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புனித உவரி அந்தோனியார் திருத்தல பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவானது தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று தினசரி காலை திருயாத்திரையுடன் கூடிய திருப்பலியும், மாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 12ம் திருவிழா காலை ராதாபுரம் பங்குத்தந்தை ராபின் ஸ்டான்லி தலைமையில் திருயாத்திரை திருப்பலி நடைபெற்றது. இயேசுவின் திருஇருதய கொம்பீரியர் சபையினர், வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் உவரி இறைமக்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் மாலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீருடன் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவை சேர்ந்த பக்தர்களும் ஏராளமாக வந்திருந்தனர். வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய்சிங் மீனா தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.