கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் போன்ற இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 340-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இதேபோன்று நாகர்கோவில் கோணம் பகுதியில் 1.65 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய எல்காட் அகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. இதில் ஒரே இடத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் தொழில் தொடங்கும் முன் வந்தால் அதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என நாகர்கோவில் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது. இதனால் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எட்டு மனித வள நிறுவனங்களுக்கு நடத்தப்பட்ட இந்த விளக்க கருத்தரங்கில் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை செயலாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








