முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது .மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான சூழலில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சரவைகூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தம் குறித்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதேபோல 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மற்றும் ஆளுநரின் செயல்பாடு, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.







