திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக தமிழ்நாடு அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கனவே ஆணையிடப்பட்டிருந்தது.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.







