மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – விராட் கோலி சதமடித்து அசத்தல்!

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தனது 500வது கிரிக்கெட் போட்டியில் 76-வது சதம் அடித்து விராட் கோலி அசத்தியுள்ளார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது…

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தனது 500வது கிரிக்கெட் போட்டியில் 76-வது சதம் அடித்து விராட் கோலி அசத்தியுள்ளார்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில இந்திய அணி 4  விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய  நிலையில், விராட் கோலி சதமடித்து அசத்தினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவர், 121ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். யாஷவி ஜெய்ஷ்வால் 57 , அஷ்வின் 56, இஷான் கிஷான் 25 , ஷூப்மன் கில் 10 ரன் எடுத்தனர்.

முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.இதனைத்தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் களமிறங்கினர்.

சந்தர்பால் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இரண்டாம் நேர ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.