மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகம் வாயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் முன்னணியில் இருப்பது வெற்றிகழக அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கக்கூடிய அங்கீகாரமாக பார்க்கின்றோம் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி அமைந்த பிறகு சந்திக்கின்ற முதல் தேர்தல் இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவை அளித்துள்ளார்கள்.
இது இந்த வெற்றி இதோடு நின்றுவிடாமல் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் இனி சமூக நீதி வெற்றி கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் அடையும். 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதற்கு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்பார்.




