தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நாளை மறுதினம் அக். 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் ’ரோடு ஷோ’ நடத்த உள்ளார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினர், பலத்த பாதுக்காப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகருக்கு முதல்மைச்சர் விஜய் புறப்பட்டார். முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி கோவை, திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..




