பட்ஜெட் 2022: ‘ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு’ – சு.வெங்கடேசன்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்…

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தெற்கு ரயில்வேக்காக ரூ. 7,114 கோடி ஒதுக்கப்பட்டது.

அந்த நிதி ஒதுக்கீட்டின் விவரம், அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ. 464 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ. 381.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தண்டவாளங்களை புதுபிக்க ரூ. 1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனை குறித்து தற்போது சு.வெங்கடேசன் தனது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/SuVe4Madurai/status/1489110332136058888

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டிற்கான புதிய வழித்தட திட்டங்களான திண்டிவனம்-செஞ்சி, திருவண்ணாமலை-திண்டிவனம்-நகரி உள்ளிட்ட 9 வழித்தட திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய வழித்தட திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், 59 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிததாக சேர்க்கப்பட்டுள்ள இரட்டை பாதை மற்றும் அகில ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி, மத்திய அரசு விரைவில் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.