சென்னையில் குடிநீர் இணைப்பு உடைந்து நீர் வெளியான நிலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்யப்பட்டது.
சென்னை புழல் அடுத்த ரெட்டேரி 33 வது வார்டு அம்மா உணவகம் அருகில் செங்குன்றம்-செம்பியம் மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனை கண்ட இப்பகுதி வழியாக சென்றவர்கள் சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் உடைந்து போன குடிநீர் குழாய் இணைப்பை 3 மணி நேரத்திற்கு பின் சரி செய்தனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன் இந்த பகுதியில் ரெட்டேரி மேம்பாலம் அருகில் குடிநீர் குழாய் உடைந்தது குறிப்பிடதக்கது.கோடைக்காலம் நெருங்குவதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளதால் குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்