தனி விமானத்தில் அரசுப் பயணம் – 15 நாட்களில் 5 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்த பிரிட்டன் பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனி விமானத்தில் மேற்கொண்ட பயணங்களின்மூலம் 15 நாட்களில் 5 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனி விமானத்தில் மேற்கொண்ட பயணங்களின்மூலம் 15 நாட்களில் 5 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில் ரிஷி சுனக், தனி விமானத்தில் பயணம் செய்ததன்மூலம் வெறும் 15 நாட்களில் சுமார் 5 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணத்தை செலவு செய்துள்ளதாக அறிக்கைகளில் தெரிய வந்துள்ளது.

’தி மிரர்’ நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு எகிப்து, பாலி, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு ரிஷி சுனக் மேற்கொண்ட பயணங்களுக்கு கட்டணமாக ரூ.4.56 கோடியை தனியார் விமான நிறுவனங்கள் வசூலித்துள்ளன.

விமான வாடகைக்கு ரூ.96 லட்சம், தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ.3 லட்சம், பாலியில் 5 நாட்கள் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டிற்கு சென்றபோது விசா, தங்குமிடம், பயணம் மற்றும் உணவு, விமான வாடகை ஆகியவற்றிற்காக ரூ.3 கோடி, இதர செலவுகளுக்காக ரூ.99 லட்சம் என மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் வரை ரிஷி சுனக் 15 நாட்களில் செலவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.